எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய தெலுங்கு நாவலை மையப்படுத்தி மலையாளத்தில், ஆஷிக் அபு
இயக்கத்தில் 2011-ல் வெற்றி படமாய் வெளிவந்த ''சால்ட் அண்ட் பெப்பர்''
திரைப்படத்தின் மறுஆக்கமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ‘’உன் சமையலறையில்’’
‘’உன்
சமையலறையில்’’ திரைப்படத்தில்
தமிழர்களின் உணவு சுவையுணர்வை மையப்படுத்தி அதன் ஊடே காதல்
அரும்ப செய்து சமுக பிரச்சனைகளை அலச முற்பட்டிருக்கிறார் திரைப்படத்தின் நாயகனும்
இயக்குனருமான பிரகாஷ்ராஜ்.
‘’இந்த பொறப்பு தான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது ‘’என்கிற தலைப்பு பாடலுடன் தொடங்குகிறது
திரைப்படம் .இளையராஜாவின் இசை ஆளுமையில் தமிழகத்தின் மிகப் பிரசித்திபெற்ற
உணவுவகைகளின் காட்சிபடுத்தளில் நாவில் நீர் ஊற வைக்கிறது
காதல் தோல்விக்குப் பிறகு திருமணமே செய்யாமல் தனி மரமாகவே வாழ்ந்து
வரும் நாற்பத்தைந்து வயதான தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரகாஷ் ராஜ், செவ்வாய் தோஷம்,
நாகதோஷம் போன்ற ஜாதக வில்லங்கங்களால் திருமணம் தள்ளிப்போன சினேகா ..இந்த
இரண்டு உணவுப் பிரியர்களிடையே ஏற்படும் மோதலும் அதை தொடர்ந்து ஏற்படும் நட்பும் காதலாய் மலருகிறது, சந்திக்க முடிவு
எடுக்கிறார்கள்.ஆனால், தாழ்வுமனப்பான்மையால் இருவருமே தங்களுக்குப் பதில் வேறு
ஒருவரை அனுப்பிவைக்க, அது உண்டாக்கும் குழப்பங்களும் தடுமாற்றங்களுமே கதை!
ஒரு பிரெஞ்சு போர் வீரனுக்காக காத்திருந்து அவன் காதலி
தொடர்ந்து நான்கு நாட்கள் கேக் செய்வதும் போர் முனையில் இருந்து திரும்பிய
அவனுக்கு அதை கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தியதை இணைத்து நாயகன் நாயகியின் காதலை
வெளிப்படுத்துவது போன்ற காட்சியமைப்பும் அதற்க்கு அமைக்கப்பட்ட பின்னணி இசையும்
தமிழ் திரையுலகில் ஒரு புதிய முயற்சி !
செவ்வாய் தோஷம், நாகதோஷம்
போன்றவற்றால் பாதிக்கப்பட்டு திருமண வயதைத் தாண்டிய பெண்கள் எதிர்கொள்ளும்
காட்சியமைப்புகள் சிறப்பாக படம்
பிடிக்கபட்டுள்ளது அதிலும் ஊர்வசியிடம்,
‘எனக்கு கல்யாணம் ஆகவில்லை, என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?ன்னு போற வர்ற எல்லார்கிட்டேயும்
கேட்கவா முடியும்னு’. சொல்லி அழும் இடம் ஜாதகத்தால் சீரழிக்கப்பட்ட பெண்களின்
வேதனையை வெளிப்படுத்துகிறது.
ஜக்கையா என்கிற பழங்குடி இனத்தை சார்ந்தவரை அவரது மூலிகை
கண்டுபிடிப்புக்காக பன்நாட்டு கம்பனிகள் துரத்துவதும் அவர்களுக்கு உள்ளூர் அரசியல்
பிரமுகர்கள் துணை போவதும்,அந்த ஜக்கயாவை காப்பாற்ற முனைந்து முடியாமல் நாயகன்
தடுமாறுவதும் சொல்லப்படிருந்தாலும் இந்த பிரச்னையை இன்னும் ஆழமாய் சொல்லி
இருக்கலாம் என்கிற ஆதங்கம் தோன்றுகிறது .
காவேரி நதி பிரச்னை அந்த நதி பொறந்ததுக்கு முன்னே இருக்கு’,
‘பூமிக்கு அடியில் நாம கண்டு எடுக்கிற கடவுள் சிலை கூட
காதலிக்குது. நாமதான் கல்லா இருக்கும்’
”அவளை உனக்குப் பிடிச்சிருக்குங்கிற முடிவை நீ எடு. அவளுக்கு
உன்னைப் பிடிக்காதுங்கிறதை அவளே எடுக்கட்டும்” போன்ற
செழுமையான வசனங்களை வழங்கியிருக்கிறது
விஜி மற்றும் ஞானவேலின் கூட்டணி
இத் திரைப்படத்தின்
ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி இளையராஜா தனது இசையால் ஆளுமை செய்கிறார் ,குறிப்பாக
திரைப்படத்தின் இறுதிக்காட்சி வசனங்களை விட இளையராஜாவின் இசையே முக்கியத்துவம்
வகிக்கிறது , இத் திரைப்படத்தில்
திரைகதை அமைப்பில் ஒரு சில குறைகள் இருந்தாலும் நல்ல தரமான படம் என்கிற
வகையில் வரவேற்கலாம் !
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக